புத்தகத்தோட ஆரம்பத்திலே தெளிவா disclaimer கொடுத்திருப்பாரு. அதாவது புத்தகம் முழுக்க நாட்டினில் மற்றும் வீட்டினில் நடக்கின்ற அவலங்களை, ஆகையால் இதை வாசித்தால் மனது புண்படும் என்று நினைக்கும் வாசகப் பெருமக்களே சற்று தள்ளி அதே ரேக்கில் வேறேவது புத்தகத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
என்ன ஒன்னுனா கதையில வந்த பெரும்பாலான கதைமாந்தர்கள் பெருசுகள்தான். இவருக்கு வயசாகுதுன்றனால இதுமாதிரி எழுதுறாரோ என்னவோ. பாதி புக் முழுக்க அவங்கள பத்தினதுதான்.
நம்மலோட ஸ்லாங் ஒத்து போதுனா அது கும்பமுனியோட கதை மட்டும். ஸ்லாங் மட்டுமில்லாமல் அவரோட கேரக்டரும் ஒத்துப்போகும் வகையில் எனக்கு உள்ளது. பொதுவா ப்ரண்ட்ஸோட மனக்குமுறல் இன்னொருதனுக்கு நல்லாருக்கும்ன்றதை போல நாஞ்சில் நாடனோட மனக்குமுறல் எனக்கு சிரிப்பா இருந்தது. அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதனால இதை சொல்றேன்.
படுவப் பத்து கதை மட்டும் பிக்கப் ஆகுறதுக்கு கொஞ்சம் நேரம் ஆச்சு மத்த கதையெல்லாம் ரெண்டு பக்கத்தை வாசித்தாலே புடிபட்றும். Unexpected things can happen in real life. Not only real life even in short story books. கும்பமுனி கேரக்டர் மறுபடியும் வந்தது. இந்த டைம் கொஞ்சம் நக்கல் கூடுதலா இருந்தது. ரொம்பவே நல்லா இருந்தது.
ஆக இந்தப் புத்தகம் மொத்தமாக நல்லாத்தான்ம்டே இருக்கு. படிச்சு முடிச்சுட்டு கொஞ்சம் மனசாட்சியோட இருந்தம்னா எல்லாருக்கும் நல்லது. ஒன்னு மட்டும் தெளிவுடே பணம் எப்பம் வரும் போவும்னு எவனுக்கும் தெரியாதலே, அதனால கடைசி வரை மனுஷ மக்களை நம்பு ஏமாத்தாத பாத்துக்க. இல்லாட்டி என்ன நடக்கம்னு நான் சொல்லமாட்டேன்டே ஆனா நடக்க வேண்டியது கன்பாஃர்ம் நடக்கும். அதுவும் எப்பம் நடக்கும்னு எவனுக்கும் தெரியாதுடே.
சூடிய பூ சூடற்க கதைல்ல கடைசி வரை யாருக்கு பூ போட போறாங்கனு தெரியலை
Comments
Post a Comment